Print this page

மஹிந்தவிடம் இருந்து ஜனாதிபதிக்கு அவசர தொலைபேசி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அது இடம்பெற்ற விதம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொஹொட்டுவ வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டமையே முன்னாள் ஜனாதிபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அறியமுடிகின்றது.

“பொஹொட்டுவா இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கும் உங்கள் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கும் உங்களுக்கு ஆதரவளிக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்” என்றும் மகிந்த ராஜபக்ச இங்கு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.