Print this page

400 காட்டு யானைகள் பலி!!

இந்த வருடத்தில் மொத்தம் 400 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 200 காட்டு யானைகள் மரணம் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில காட்டு யானைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளன.

இதேவேளை, சில காட்டு யானைகள் பல்வேறு நோய்களினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் சுமார் 6,000 யானைகள் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித நடவடிக்கைகளினால் வசிப்பிடங்களை இழந்துள்ளமையினால், யானைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.