Print this page

கொழும்பு தீ விபத்தில் 23 பேர் பாதிப்பு

புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெரு வீதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன் பல  மண்டபங்களுக்கும் தீ சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.