Print this page

நாடாளுமன்ற ஊழியர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்

 

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற அலுவலக ஊழியர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த 45 வயதான பாராளுமன்ற அலுவலக ஊழியர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நாடாளுமன்ற அலுவலக ஊழியரை 3 மாதங்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.