Print this page

பாராளுமன்ற தேர்தல் கோரும் மொட்டுக் கட்சி!

November 01, 2023

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கட்சிக்குள் பல பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க பொதுத் தேர்தலை பயன்படுத்த முடியும் எனவும் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடல்களில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வரவு செலவுத்திட்டத்தை கட்சி ரீதியாக நீண்ட நேரம் ஆராய்ந்த பின்னர் தீர்மானம் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.