Print this page

15 லட்சம் பேருக்கு கிடைக்கவுள்ள சம்பள உயர்வு

November 08, 2023

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000/- ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்து பின்னர் அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி முதல் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.