Print this page

வரவு செலவுக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதிக்கு மொட்டு நிபந்தனை

November 09, 2023

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் பொஹொட்டுவ தலைமையிலான குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

அதாவது, முன்மொழிவுகள் பற்றி விவாதிப்பதற்கு இந்த சந்திப்பு கோரப்பட்டுள்ளது. 

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த விசேட கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரவு செலவுத் திட்டத்தில் தமது ஆதரவு தேவைப்படுமாயின் அதற்கான முன்மொழிவுகளை வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்குமாறு பொஹொட்டுவ பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று காலை நடைபெறவுள்ளது.