Print this page

ரொஷான் ரணசிங்கவுக்கு மேர்வின் விடுக்கும் சவால்

November 10, 2023

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தீர்மானம் எடுக்கும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் என்ற முறையில் எனக்கும் அந்த பாரம்பரியம் தெரியும் என்றார்.

அவ்வாறு இல்லாமல் சந்தையில் மரக்கறிகளை எண்ணுபவர்களைப் போன்று அமைச்சரவை தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முதுகெலும்பு இருக்குமானால் அவர் இப்போது செய்ய வேண்டியது இந்த அறிக்கைகளை விடுத்து சாகாமல் பதவி விலகுவதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.