Print this page

தலவாக்கலையில் 22 வயதுடைய இளைஞன் வெட்டிக் கொலை! நான்கு இளைஞர்கள் கைது

November 14, 2023

தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் காணப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் 04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும், வட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இருவர் வெட்டுக்காயங்கள் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.