Print this page

பிரபல பெண் தலைமையில் மாபெரும் அரசியல் மாற்றம்!

November 16, 2023

நீண்டகாலமாக இந்நாட்டின் அரசியலில் ஈடுபட்டு வரும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கட்சிகளின் ஆதரவுடனும் தற்போது நாடாளுமன்ற சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு செயற்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக தனது கட்சியின் ஆதரவைப் பெறுவது குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.

பல சர்வதேச உறவுகளைக் கொண்ட இந்த அரசியல் தலைவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு இப்போதே தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் இதில் முழுமையாக கலந்து கொண்டு அரசியல் சபை அமைப்பது தொடர்பிலான விடயங்கள் மேற்கண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளன.