Print this page

மஹிந்தவிற்கு பாடமெடுத்த முருந்தெட்டுவே தேரர்

November 19, 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாராஹென்பிட்டி அபயாராம விகாரை தலைவர் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் அனுசரணையுடன், பாலூட்டும் தாய்மார்களுக்கான நற்பணி சேவை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இங்கு கருத்து தெரிவித்தார். 

“நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்குக் கடமையாக இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறேன். ஆனால் இன்று இங்குள்ள நிலைமை பாருங்கள். அன்று இங்கு இருக்கக்கூட முடியாத நிலைமையை கூட்டத்தை காணமுடியும். எத்தனையோ அமைச்சர்கள். இன்று நிலைமை எவ்வளவு மாறிவிட்டது பாருங்கள். அதிகாரம் இருக்கும் வரை மக்கள் ஏராளம். அதிகாரம் இல்லாவிட்டால் யாரும் இல்லை. இவை உங்களுக்கு நல்ல பாடங்கள்." என மஹிந்த ராஜபக்ஷவை பார்த்து கூறினார்.