Print this page

மேலதிக வாக்குகளால் வரவு செலவு 2ஆம் வாசிப்பு வெற்றி

November 21, 2023

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

வாக்கெடுப்பின் போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதன்படி 45 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.