Print this page

பாராளுமன்றம் கூடுவது நடிப்பதற்கு அல்ல - ஜனாதிபதி

November 22, 2023

பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாரேனும் நடிக்க விரும்பினால் வீதியில் இறங்கி நடிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றம் ஆரம்பிக்கும் முதல் மணித்தியாலத்தின் பின்னர் பிரதான பணிகளுக்கு செல்லுமாறு விதியை முன்மொழிவதாக தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற நேரம் ஒன்று அல்லது இரண்டு மணி வரை சபையின் பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.