Print this page

இன்று இரவு முழுவதும் கொழும்பில் நீர் தடை

November 24, 2023

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (24) முதல் நாளை (25) வரை 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (24) மாலை 5.00 மணி முதல் நாளை (25) காலை 9.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் தடை செய்யப்படவுள்ளது.