Print this page

பேராசிரியர் சரத் விஜேசூரியவிற்கு நீதிமன்ற அழைப்பாணை


பேராசிரியர் சரத் விஜேசூரியவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் மாதம் 21 திகதி நீதிமன்றில் முன்னி​லையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வென்னப்புலி ஆகியோர் அங்கிய நீதியர்சர்கள் குழாம் இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக தெரிவித்து, பேராசிரியர் சரத் விஜேசூரியவிற்கு எதிராக ஓய்வுபெற்ற இராணுவ வீரரொருவரும் மற்றும் சட்டத்தரணியொருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.