Print this page

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை

November 24, 2023

இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.