Print this page

விமலுக்கு எதிரான கடவுச்சீட்டு வழக்கு ஒத்திவைப்பு

November 25, 2023

செயலற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று (23) நீர்கொழும்பு பிரதான நீதவான் அமில ஆரியசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குடிவரவுச் சட்டத்தை மீறிச் செயலற்ற கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகக் கூறி அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.