Print this page

பொலிஸ் மா அதிபர் பதவி மீண்டும் வெற்றிடம்

November 25, 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மூன்றாவது முறையாக வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நேற்றுடன் (24ஆம் திகதி) முடிவடைந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

சில அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் சீர்குலைவு காரணமாக புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படாமையால் பொலிஸ் திணைக்களத்தின் பணிகள் நெருக்கடியான நிலையில் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.