Print this page

5 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

November 26, 2023

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சன்னங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கையில் அணியப்படும் இலக்கத் தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அகழ்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.