Print this page

புலிகளால் செய்ய முடியாததை செய்ய சஜித் முயற்சி

November 26, 2023

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் பறிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.

அரகலயவின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.