Print this page

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் திகதி இதோ

November 27, 2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரையிலான காலத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 29 முதல் ஜூன் 8 வரை நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு சுமார் 300,000 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

கடந்த உயர்தரப் பரீட்சை நடாத்துவதில் தாமதம் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு என்பனவும் இந்த பெறுபேறுகளை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதாக திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டைப் புறக்கணித்திருந்தனர்.