Print this page

அரச வாகனங்களை திருட்டுத்தனமாகப் பயன்படுத்தும் நசீர்! பொலிஸில் முறைப்பாடு

November 27, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நஸீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய இரண்டு சொகுசு ஜீப்களைதனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறக்குறைய 20 கோடி ரூபா பெறுமதியான இந்த இரண்டு வாகனங்களும் அரசாங்கத்தினால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களாகும்.

இவ்விரு வாகனங்களும் மீள ஒப்படைக்கப்படாதமை தொடர்பில் சுற்றாடல் அமைச்சு மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் அவருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டு வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என பதிலளித்துள்ளார்.

ஆனால் இந்த வாகனங்கள் இதுவரை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.