Print this page

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் நியமிப்பு

November 29, 2023

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்கள் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றதையடுத்து அவருக்கு பதிலாக பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.