Print this page

தென்னாப்பிரிக்க தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு

November 30, 2023

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் ஈ. ஷால்க் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான கொழும்பு சௌமிய பவனில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

தென்னாப்பிரிக்க தூதுவர் தனது அரசியல் செயலாளருடன் இணைந்து கூட்டு முயற்சித் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.