Print this page

ஜனவரியில் பலமான கூட்டணி - சஜித் தரப்பில் இருந்து அறிவிப்பு

December 03, 2023

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்காக மேலும் 20 கட்சிகள் இணைத்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சிகளைத் தவிர, பல பொது அமைப்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன.

கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளுடனும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை மாத்திரம் தமது கூட்டணியில் இணைத்துக் கொள்ள ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் செயலாளர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.