Print this page

முன்னாள் விளையாட்டு துறை அமைச்சருக்கு கை கொடுத்த இந்நாள் விளையாட்டு துறை அமைச்சர்

December 04, 2023

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 10 நிமிடத்தை வழங்குமாறு கேட்டுள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கருத்து தெரிவிக்க கால அவகாசம் தேவை என தெரிவித்தார்.

அரசாங்கம்  நேரம் வழங்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் நேரத்தை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.