Print this page

படுதோல்வியை சந்தித்த மொட்டு கட்சி வரவு செலவுத் திட்டம்!

December 05, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளும் எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் கருணாசேன பொன்னம்பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 9 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவை  உப தலைவர் உட்பட 7  உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் பத்து உறுப்பினர்களே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.