Print this page

ரஷ்ய – உக்ரேன் மோதல் – மூன்று இலங்கை இராணுவ வீரர்கள் பலி

December 06, 2023

ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலில் உக்ரேனிய இராணுவ குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று இலங்கை இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய இராணுவத்தின் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி ரஷ்யப் படைகள் உக்ரைன் போர்முனையில் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.