Print this page

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா விடுதலை

December 06, 2023

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

விஐபி படுகொலை சதி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் 2019 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என இன்று சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.