Print this page

புதிய அரசியல் கூட்டணி மேடையில் வடமேல் ஆளுநர்

December 06, 2023

புதிய அரசியல் கூட்டணியின் ஆசிரியர் வல்லுனர்களின் மாத்தறை மாவட்ட மாநாடு (நாளை) பிற்பகல் 2.00 மணிக்கு மாத்தறை நுபே சனச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வடமேற்கு மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஆகியோரின் தலைமையில் இது இடம்பெற உள்ளது. 

புதிய கூட்டணியின் விழா ஒன்றில் வடமேற்கு ஆளுநர் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதும் சிறப்பு.

புதிய கூட்டணியின் கொழும்பு மாவட்ட  ஆசிரியர் மாவட்ட மாநாட்டில் கீதா குமாரசிங்கவும் இணைந்துகொண்டார்.