Print this page

புத்தளத்தில் புது கூட்டணி களப்பணியில்

December 09, 2023

புதிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் முழுவதும் அதன் 5 தொகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ராஜகிரிய கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச பிரதிநிதிகள் நியமனம், இணைந்த அமைப்புக்கள் ஸ்தாபனம், பிக்கு அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் ஸ்தாபித்தல் போன்ற நிகழ்வுகள் மாதம் முழுவதும் நடைபெறவுள்ளதுடன், நிகழ்ச்சியை வழிநடத்த சிறிபால அமரசிங்க, சுகீஸ்வர பண்டார ஆகியோர் சென்றுள்ளனர்.

புத்தளம் பொஹொட்டுவ பிரதேசத்தில் உள்ள சிலர் இந்த வேலைத்திட்டத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கட்சி அலுவலகம் கூறுகிறது.

இதேவேளை,  சிலாபம் தொகுதியை மையமாக வைத்து இன்று பகல் முழுவதும் மாதம்பே கருக்குவ சுகதானந்த மகா வித்தியாலயத்தில் மாகாண சபையின் நடமாடும் சேவை நடைபெறுகிறது.

வடமேற்கு ஆளுநர் திரு.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் நிமல் லான்சா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இது நடைபெறுகிறது.