Print this page

கந்தகாட்டில் இருந்து தப்பிச் சென்ற 20 கைதிகள் இதுவரை கைது

December 12, 2023

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனையவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் நேற்று (11) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளனர்.