Print this page

வாளி நிறைய புன்னாக்குடன் மொட்டுக் கட்சி அலுவலகம் சென்ற ஆதரவாளர்கள்

December 18, 2023

சாகர காரியவசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் மக்கள் போராட்ட இயக்கம் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.

பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். 

பாதுகாப்பு படையினர் சாலையை மறித்ததால் அவர்களால் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை.

பின்னர் சாலை முன் மறியல் செய்தனர்.

புன்னாக்கு வாளியுடன் நடந்து சென்று இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.