Print this page

ஜனாதிபதி தமது கட்சியை உடைப்பதாக டிலான் குற்றச்சாட்டு

December 18, 2023

சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் பதின்மூன்று உறுப்பினர்களும் ஒரே கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுவதாகவும் இதன் காரணமாகவே அவர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் சுதந்திர மக்கள் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.பி டிலான் பெரேரா இன்று (18) தெரிவித்தார். 

நாவல சுதந்திர மக்கள் சபையின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சுதந்திர மக்கள் சபையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும், ரணில் - ராஜபக்ச அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டு சேர்வதை காலம் தாழ்த்துவது சிறந்ததல்ல என தெரிவித்த டிலான் பெரேரா, எதிர்காலத்தில் இரண்டு மூன்று பேர் அமைச்சு பதவிகளுக்கு கனவு காண்பவர்கள் சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கலாம்  எனவும் தெரிவித்தார்.