Print this page

'ஜனாதிபதி தேர்தலை தாமதிக்க இடமளியோம் '

ஜனாதிபதி தேர்தலை  தாமதப்படுத்துவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னர் கூறியதை போல, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.