Print this page

கோட்டையில் காணாமல் போன முஸம்மில் எம்பியின் துப்பாக்கி சிக்கியது

December 21, 2023

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலின்  பாதுகாவலரான அமைச்சர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜனுடைய கைத்துப்பாக்கி ஆயுதம், ரவைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பயணப் பொதியை திருடியவர் கைது செய்யப்பட்டதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் புறக்கோட்டை ஒல்கோட மாவத்தை பேருந்து நிறுத்தத்தில்  தூங்கிக் கொண்டிருந்த போது இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபரிடம் கைத்துப்பாக்கி, 24 தோட்டாக்கள், 2 மகசீன்கள், பொலிஸ் விளையாட்டு உடைகள், அமைச்சர் பாதுகாப்பு உடை, அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் குறிப்பேடு மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான சில ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தேடுதல் நடவடிக்கையின் போது கிருலப்பனை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, சார்ஜன்டிற்கு சொந்தமான பொருட்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Last modified on Thursday, 21 December 2023 07:24