Print this page

நாமலுக்கு கொடுக்கத் தயங்கும் பசில்

December 22, 2023

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கு பசில் ராஜபக்ஷ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட மாநாடு மற்றும் நிறைவேற்று சபையில் நாமல் ராஜபக்ஷ அந்த பதவிக்கு முன்மொழியப்படவிருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக அந்த பிரேரணைக்கான அங்கீகாரம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்லவுள்ள நிலையில், கட்சியின் நிறைவேற்று சபையும் நீண்ட நாட்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கூடியது.

கட்சியின் ஒருசில பதவிகளுக்கு மட்டுமே பெயர்கள் முன்மொழியப்பட்டதுடன், தேசிய அமைப்பாளர் பதவியும் காலியாக உள்ளமையும் விசேட அம்சமாகும்.