Print this page

நாளையும் மறுதினமும் மதுபான சாலைகளுக்கு பூட்டு

December 24, 2023

எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு 25 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படுகின்றன.

எவ்வாறாயினும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போயா தினத்தை முன்னிட்டு 26 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.