Print this page

வைரஸ் காய்ச்சல் ஆபத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும்

December 27, 2023

மழையுடன் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் இந்நோய் உள்ள சிலருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குரல் வளம் இழக்க நேரிடும் எனவும் களுபோவில போதனா வைத்தியசாலையின் உடல் நோய்கள் தொடர்பான நிபுணர் டொக்டர் நந்தன திக்மதுகொட தெரிவிக்கின்றார்.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக திக்மதுகொட குறிப்பிடுகின்றார்.

இது வேகமாகப் பரவி வருவதால், இந்நிலை நீண்ட நாட்களாக நீடித்தால் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

“இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டதை நான் பார்த்தேன். இதையெல்லாம் செய்யவே கூடாது. இந்த விடுமுறை காலத்தில் நாங்கள் பயணம் செய்கிறோம். இது காற்றில் பரவுகிறது. கோவிட் சூழ்நிலையில் நாம் பயன்படுத்திய நல்ல  நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும். ஆபத்து பகுதிகளில் உள்ளவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சலைப் போலவே டெங்குவும் பரவி வருகிறது. தற்போது பதிவாகியுள்ள 87,000 நோயாளிகளில் 17,000 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். டெங்கு போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அல்லது அது அதிகரிக்கும் போது ஆபத்தாக முடியும்" என் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.