Print this page

சனத் நிஷாந்த என தெரிந்தும் துணிவுடன் இரும்பு கம்பியால் தாக்கிய கோடீஸ்வரர்!

December 29, 2023

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த வாகனத்தில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் அமைச்சரின் வாகனத்தை இரும்பு கம்பியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சென்று கொண்டிருந்த போதே மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக   இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரின் சொகுசு ஜீப் மற்றைய காரை சேதப்படுத்தியதாகவும் அதில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் தனது வாகனத்திற்கு சேதம் விளைவித்ததை பார்த்து ஆத்திரமடைந்து அங்கிருந்த அமைச்சரின் வாகனத்தை இரும்பு கம்பியை எடுத்து தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.