Print this page

போதகர் ஜெரோம் கடும் நிபந்தனை பிணையில் விடுதலை

ஒரு மாதத்துக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா பத்து மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

மேலும் அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.