Print this page

பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு, இன்று அறிக்கை சமர்பிப்பு

பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்கள் தொடர்பில் தொகுக்கப்பட்ட குழு அறிக்கை இன்று வியாழக்கிழமை (04) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததன் பின்னர் பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.