Print this page

மின் கட்டணம் 50% குறைய வாய்ப்பு

இம்மாதம் மீண்டும் 50% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் பிரேரணை எதிர்வரும் 12 அல்லது 13 ஆம் திகதி பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது தொடர்பான நடவடிக்கைகள் ஆணைக்குழு ஊடாக மேற்கொள்ளப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த மேலும் தெரிவித்தார்.