Print this page

ரணிலை வீட்டுக்கு அனுப்பத் தயாராகும் அணி

அடுத்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் அல்லது பொதுத் தேர்தலாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய ஜனாதிபதி பதவி அத்தோடு முடிவடையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அடிமட்டத்தில் எழுந்துள்ள விழிப்புணர்வை அறிந்து, அடுத்து எந்தத் தேர்தலை நடத்துவது என்ற சந்தேகம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

தேசிய மக்கள் சக்திக்கு பாதகமான தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.