Print this page

அரசியல் பல்டி..

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு சமகி ஜன பலவேகவின் பலமான உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், நெருக்கடியான நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு மாகாணம், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை, அண்மைய நாட்களில், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேகயவில் இணைந்து கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக சமகி ஜன பலவேகய உறுப்பினர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய எம்.பி.க்கள் சேர்க்கையால் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் போட்டி வலுத்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.