Print this page

வீண் பேச்சு வேண்டாம் - தைரியம் இருந்தால் அநுர விவாதத்திற்கு வரவும் - திலித் மீண்டும் அழைப்பு

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நம்பிக்கையும் தைரியமும் இருக்குமானால் வீண்பேச்சு பேசாமல் விவாதத்தில் ஈடுபடு வருமாறு மௌபிம ஜனதா கட்சி தலைவர் திலித் ஜயவீர மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். 

அநுரவுக்கு விடுத்த அழைப்பு இன்னமும் செல்லுபடியாகும் என ஸ்ரீலங்கா கார்டியனுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 

அரசியல் சித்தாந்தம் கொண்ட ஒரே அரசியல் கட்சி தமது கட்சிதான் என கூறிய திலித் ஜெயவீர, தற்போதுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களால் தீர்க்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.