Print this page

மரணத்தில் ஏற்பட்டுள்ள திடீர் சந்தேகம்

February 08, 2024

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் சந்தேகத்திற்குரிய இடங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சாமரி பிரியங்கா முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மரணம் தொடர்பில் பல குறிப்பிட்ட உண்மைகளை முன்வைத்து சுமார் ஐந்து பக்கங்கள் கொண்ட விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா நேற்று (07) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப், கன்டெய்னர் ட்ரக் வண்டியுடன் ஜனவரி (25) மோதியதில் இராஜாங்க அமைச்சரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தனர்.