Print this page

Unp யில் இணைந்த Sjb முக்கியஸ்தர்

February 11, 2024

இன்று (11) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளராக இருந்த அசங்க ஜயவிக்ரம பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.

அதன்படி இன்று முதல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்டத்தின் கட்டுகம்பல தொகுதி அமைப்பாளராக கடமையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு தனது நிறுவன பலத்தை வழங்குவதே அசங்க பெரேராவின் நோக்கமாகும்.

இது குறித்து அறிவிப்பதற்காக குருநாகல் கடுகம்பல பிரதேசத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.