Print this page

மற்றும் ஒரு எம்பி பயணித்த சொகுசு வாகனம் விபத்தில்

February 13, 2024

சாலியவெவ 15ஆம் கட்டை பகுதியில் கை உழவு இயந்திரத்துடன் சொகுசு ஜீப் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சாரதியுடன் தனது வாகனத்தில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 1.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப், அவருக்கு முன்னால் பயணித்த கை உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.