Print this page

சபாநாயகரை காப்பாற்ற மொட்டு கடும் பிரயத்தனம்

February 29, 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக சமகி ஜன பலவேகய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

சுயேச்சையாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சியின் உறுப்பினர்களும் எதிராக வாக்களிப்பார்கள் என குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த வாரம் பாராளுமன்ற பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் பிரேரணை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.